இளம் பேச்சாளர்கள் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பரிசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இளம் பேச்சாளர்கள் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பரிசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 Aug 2023 6:05 AM GMT (Updated: 23 Aug 2023 6:29 AM GMT)

இளம் பேச்சாளர்கள் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பரிசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

வரலாறு போற்றக்கூடிய பேச்சாளர்களை உருவாக்கும் தளம் தான் பேச்சு போட்டி. இளம் பேச்சாளர்கள் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பரிசு. மேடைகளில் பேசுபவர்கள் தங்களுக்கென தனி பாணி கொண்டிருப்பவர்கள்.

இளம் பேச்சாளர்களின் உரைகள் வருங்காலங்களில் பலருக்கும் கையேடாக இருக்க வேண்டும். கனல் தெறிக்கும் வசனங்களை பேசி தமிழர்களுக்கு உணர்வூட்டியவர் கருணாநிதி. பகுத்தறிவு கருத்துளை பட்டென சொன்னவர் பெரியார்.

தமிழகத்தில் இளம் பேச்சாளர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். நான் ஓரளவுக்கு பேசுவதற்கு காரணம் பீட்டர் அல்போன்ஸ். திமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர் நலனுக்காக பல பணிகள் செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 14 சிறுபான்மை நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story