காஞ்சீபுரத்தில் 2 பெண் குழந்தைகளை நடுரோட்டில் தவிக்க விட்டு சென்ற இளம்பெண்

காஞ்சிபுரத்தில் தாய் தனது 2 பெண் குழந்தைகளை நடுரோட்டில் தவிக்க விட்டுச்சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரத்தில் 2 பெண் குழந்தைகளை நடுரோட்டில் தவிக்க விட்டு சென்ற இளம்பெண்
Published on

காஞ்சீபுரத்தின் முக்கிய வணிகப் பகுதியான ரெயில்வே ரோடு உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் 2 மற்றும் 4 வயதுடைய 2 பெண்குழந்தைகளுடன் ரெயில்வே சாலை, பகதூர் கான் பேட்டை தெருவழியாக நடந்து சென்றார். திடீரென அந்த இளம்பெண் 2 குழந்தைகளையும் நடுரோட்டில் விட்டு விட்டு மாயமானார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த குழந்தைகள் சிறிது நேரத்தில் அழத் தொடங்கினர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறுமிகளை அழைத்து வந்தது அவர்களது தாயா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக காஞ்சீபுரம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் மாயமான இளம்பெண் 2 குழந்தைகளுடன் வருவது பதிவாகி உள்ளது. இந்த புகைப்படத்தை காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் போலீசார் அனுப்பி விசாரித்து வருகிறார்கள். இதுவரை மீட்கப்பட்ட சிறுமிகள் யார்? அவர்களது பெற்றோர் யார்? சிறுமிகளுடன் வந்த இளம்பெண் யார்? என்பது குறித்து எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்க வில்லை. இதைத்தொடர்ந்து சிறுமிகள் 2 பேரும் பரங்கிமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com