பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

போடியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
Published on

சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாயி (வயது 57). சம்பவத்தன்று இவர், போடி தென்றல் நகரில் உள்ள தனது மகள் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்தார். அங்கு போடி வாரச்சந்தை சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பெருமாயி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அவர் போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெருமாயிடம் நகையை பறித்து சென்றது கேரள மாநிலம் பூப்பாறை அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 பவுன் நகையை மீட்டனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com