மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிரயாங்குப்பம் கிராமத்தில் தனியார் முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. அதே பகுதியில் சேர்ந்த உதயநாத் பரிடா (வயது 29) தன் மனைவி லட்சுமிபிரியா பரிடாவுடன் அந்த முதியோர் இல்லத்தின் அருகே வசித்து வந்தார். நேற்று முன்தினம் முதியோர் இல்லத்தில் விளக்குகள் எரியாததால் உதயநாத் பரிடா ஸ்விட்ச் போடுவதற்காக சென்றார்.

அவர் சுவிட் போடும்போது மின் ஒயர் பழுதடைந்து இருந்ததால் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இறந்த உதயநாத் பரிடா உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story