தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது + "||" + Coronavirus in India LIVE: 1,98,706 COVID-19 cases; 5,598 deaths; recovery rate 48.07%

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி

மத்துய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் 8,171 புதிய கொரோனா  பாதிப்புகள் பதிவாகி உள்ளது மற்றும் 204 இறப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 ஆக அதிகரித்து உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 லிருந்து 95,527 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,394 லிருந்து 5,598 ஆக அதிகரித்துஉள்ளது. கொரோனா பாதித்த 97,581 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறி உள்ளது. 

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,358 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மராட்டியம்  70,000 க்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் மற்றும் 2,360 க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கொண்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் நிதி தலைநகரான மும்பை, மாநிலத்தின் கொரோனா வைரஸின் மையமாக மாறியுள்ளது, அங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 41,000 ஐ தாண்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,300 யை  கடந்து இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 1,413 பாதிப்புகள் மும்பையில் பதிவாகியுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. முதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து
முதன்முதலாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த பெருமையை பெற தீவிரமாக செயல்படும் நாடு! அதனால் வரப்போகும் ஆபத்து.
2. சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்
சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
3. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.
4. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பதிவு செய்யும் ரஷியா
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
5. சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டம்
இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...