மாநில செய்திகள்

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு ; ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு + "||" + chennai zoning-wise corona impact;Continued Impact Increase in Rayapuram Zone

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு ; ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு ; ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,935 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாட்களாக, நாள்தோறும் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டி வருகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தமாக 23,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13,170 பேர் குணமடைந்துள்ளனர். 10,138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 184 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு ;ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ராயபுரம் - 2,935 
கோடம்பாக்கம் - 1,867 
தண்டையார்பேட்டை - 1,839


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் - இங்கிலாந்து
கொரோனா பாதிப்பு சிவப்பு பட்டியலில் அமெரிக்கா அங்கிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்கொள்வார்கள் என இங்கிலாந்து கூறி உள்ளது.
2. இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லை : அரசு பகுப்பாய்வு
இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லை என அரசின் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நிலவரப்படி 291 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது.
4. இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு...?
இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
5. அமெரிக்காவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கையை அம்பலப்படுத்திய ஆய்வு
அமெரிக்காவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கை மிக அதிகம் என ஒரு ஆய்வில் அம்பலமாகி உள்ளது.