தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சி மக்களை பிரித்தாள நினைக்கிறது - அசாமில் அமித்ஷா பிரசாரம் + "||" + Congress party wants to divide people - Amit Shah campaign in Assam

காங்கிரஸ் கட்சி மக்களை பிரித்தாள நினைக்கிறது - அசாமில் அமித்ஷா பிரசாரம்

காங்கிரஸ் கட்சி மக்களை பிரித்தாள நினைக்கிறது - அசாமில் அமித்ஷா பிரசாரம்
காங்கிரஸ் கட்சி மக்களை பிரித்தாள நினைக்கிறது என்று அசாமில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் செய்த அமித்ஷா குறிப்பிட்டார்.
கவுகாத்தி,

அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்றாவது இறுதிக்கட்ட தேர்தல் நாளை 40 தொகுதிகளில் நடைபெறுகிறது. இறுதிக்கட்ட தேர்தலை சந்திக்கிற பார்பேட்டாவில் நேற்று நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“காங்கிரஸ் கட்சியானது மக்களை பிரித்தாள நினைக்கிறது. ஆனால் பா.ஜ.க. அப்படியல்ல. அனைவருடனும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்கும் நம்பிக்கை என்பதே பா.ஜ.க.வின் மந்திரம் ஆகும்.

காங்கிரஸ் கட்சியால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. அவர்களிடம் வளர்ச்சிக்கான செயல்திட்டம் எதுவும் இல்லை. இங்கு 2 கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்து விட்டது. இந்த தேர்தல்களிலேயே அடுத்த அரசை அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பலத்தை நாங்கள் பெற்றுவிடுவோம் என்று நம்புகிறோம். 

கடந்த 5 ஆண்டுகளில் அசாமில் வரலாற்றுச் சிறப்புமிக்க போடோ ஒப்பந்தம் கையெழுத்தானது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் பொதுவான நீரோட்டத்துக்கு- இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

வன்முறையை பரப்புகிற அரசு வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களா? அல்லது இரட்டை என்ஜின் அரசாங்கம் வேண்டும் என்று விரும்புவீர்களா?”

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் யூடியூப் செய்தி சேனல் தொடங்க திட்டம்
காங்கிரஸ் கட்சி சார்பில் யூடியூப் செய்தி சேனல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சேனலில் இன்று முதல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுவார்; கே.எஸ்.அழகிரி பேட்டி
சென்னை தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பலராமனின் 75-வது பிறந்த நாள் விழா நடந்தது.
3. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மூலம் புதுச்சேரியிலும் தமிழக திட்டங்கள் நிறைவேற்றப்படும்; தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மூலம் தமிழக திட்டங்கள் புதுச்சேரியிலும் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
4. காங்கிரஸ் மேலிட தலைவருடன் மந்திரி அனில் தேஷ்முக் விவகாரம் குறித்து காங்கிரஸ் மந்திரிகள் ஆலோசனை
காங்கிரஸ் மேலிட தலைவருடன் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் மந்திரிகள் ஆலோசனை நடத்தினர்.
5. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத்பவார் தலைவராக வேண்டும்; சிவசேனா கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமை பொறுப்பை சரத்பவார் ஏற்க வேண்டும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.