தேசிய செய்திகள்

இந்தியாவில் தடுப்பூசி திருவிழாவில் 1.28 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது + "||" + Vaccination for 1.28 crore people at the Vaccine Festival in India

இந்தியாவில் தடுப்பூசி திருவிழாவில் 1.28 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

இந்தியாவில் தடுப்பூசி திருவிழாவில் 1.28 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
இந்தியாவில் தடுப்பூசி திருவிழாவில் 1.28 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவில் ஏப்ரல் 11 முதல் 14 வரையில் தடுப்பூசி திருவிழா அறிவித்து, தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி தேசிய அளவில் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. இந்த தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் (11-ந் தேதி) 29 லட்சத்து 33 ஆயிரத்து 418 டோஸ்களும், 12-ந் தேதி 40 லட்சத்து 4 ஆயிரத்து 521 டோஸ்களும், 13-ந் தேதி 26 லட்சத்து 46 ஆயிரத்து 528 டோஸ்களும், 14-ந் தேதி 33 லட்சத்து 13 ஆயிரத்து 848 டோஸ்களும் போடப்பட்டுள்ளன.

மொத்தமாக இந்த 4 நாளில் 1 கோடியே 28 லட்சத்து 98 ஆயிரத்து 314 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையின்போது சுமார் 16 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடுப்பூசி திருவிழாவின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்றபோதும், பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டதால் 29 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 2- வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29ஆயிரத்து 942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவின் கொரோனா நெருக்கடிக்கு தடுப்பூசி மட்டுமே நீண்ட கால தீர்வு: அமெரிக்கா சுகாதார நிபுணர்
இந்தியாவின் கொரோனா நெருக்கடிக்கு தடுப்பூசி மட்டுமே நீண்ட கால தீர்வு என்று அமெரிக்காவின் உயர் சுகாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவிற்கு 200 ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைத்தது தென் கொரியா
தென் கொரியாவில் இருந்து விமானம் மூலமாக 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
5. இந்தியாவில் நேற்று வரை 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் நேற்று வரை கொரோனா தடுப்பூசியின் 17 கோடி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.