கொரோனா பிரச்சினையை அரசியலுக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும் - சோனியா காந்தி

கொரோனாவை எதிர்த்து போராடுவதை அரசியலுக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா பிரச்சினையை அரசியலுக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும் - சோனியா காந்தி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

கொரோனாவை எதிர்த்து போராடுவதை தேசிய சவாலாகவும், அதனை அரசியலுக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும் என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான வயதை 25 ஆக குறைக்க வேண்டும். தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, உள்நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

கொரோனா நெருக்கடியை கணித்தல், மதிப்பீடு மற்றும் நிர்வகிப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கேட்காமல், மத்திய அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்கின்றனர்.

கொரோனாவின் 2வது அலை இந்தியாவை கடுமையாக தாக்கி உள்ளது. முதல் பாதிப்பில் இருந்து மீள ஒராண்டு முடிவதற்குள் மீண்டும் பாதிப்பில் சிக்கி உள்ளோம். காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், பிரதமருக்கு கடிதம் எழுதினேன். சில மாநிலங்களில் போதிய அளவு தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் ஆகியவை போதுமான அளவு இல்லை. இந்த விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளை அரசு கேட்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com