தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் பலி + "||" + Corona affects 2,61,500 people in a single day, the new highest in India: another 1,501 killed

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் பலி

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் பலி
இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,38,423 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,09,643 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 18,01,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 12,26,22,590 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழலில் பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இதுவரை 26 கோடியே 65 லட்சத்து 38 ஆயிரத்து 416 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 15,66,394 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. முதல் அலையை விட ஆக்ரோஷமாக சுழன்றடிக்கும் இந்த 2-வது அலையால் அரசும், மருத்துவத்துறையும் செய்வதறியாமல் திணறி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
மராட்டியத்தில் இன்று மேலும் 26,616 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் புதிதாக 21,402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - 87 பேர் உயிரிழப்பு
கேரளாவில் புதிதாக 21,402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
3. ஆந்திர பிரதேசம்: கொரோனாவால் அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட்
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
4. டெல்லியில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 4,524 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
5. இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 2,81,386 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.