தேசிய செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி: தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் + "||" + Government of Telangana announces night curfew in the state

கொரோனா பரவல் எதிரொலி: தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

கொரோனா பரவல் எதிரொலி: தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் ஒரே நாளில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,54,761 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,31,08,582 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 20,31,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், தெலுங்கானா மாநிலத்திலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 926 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3.61 லட்சமாக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 42 ஆயிரத்து 853 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,856 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் (ஏப்ரல் 20) இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் இன்று மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கலெக்டர் அலுவலக திறப்புவிழாவில் முதல்வரின் காலில் விழுந்த கலெக்டர் விளக்கம்
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை கலெக்டர் அலுவலக திறப்புவிழா நிகழ்வின்போது, முதல்வரின் காலில் கலெக்டர் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
2. தெலுங்கானாவில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்
ஐதராபாதில் 300க்கும் அதிகமான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது.
3. தெலுங்கானாவில் கொரோனா பாதித்த மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்து தனிமைபடுத்திய கணவன்
தெலுங்கானாவில் கொரோனா பாதித்த மனைவியை வீட்டுக்கு வெளியே உள்ள குளியலறையில் 5 நாட்களாக தங்கவைத்திருந்த கணவருக்கு அறிவுரை கூறி அவரது மனைவியை போலீசார் மீட்டனர்.
4. தெலுங்கானா சோதனைச் சாவடி விபத்து:சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!
சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறையினரே, இளைஞர் பலியானததற்கு காரணம் என புகார் எழுந்ததை அடுத்து தெலங்கானா அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டது.
5. வேகமாக செக் போஸ்ட் தடுப்பை கடந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு பலி- பதறவைக்கும் சிசிடிவி காட்சி
அதி வேகமாக செக் போஸ்ட் தடுப்பை கடக்க முயன்றபோது, இரும்பு தடுப்பில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.