தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 4 பேர் கைது + "||" + Four arrested for trying to infiltrate Pakistan occupied Kashmir

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 4 பேர் கைது

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 4 பேர் கைது
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாராமுல்லா,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாராமுல்லா மாவட்டத்தில் உரி பகுதியில் இருந்து 4 பேர் வெளியேறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று 4 பேரையும் கைது செய்தனர்.  இதில், கோஹல்லான் பிரிவை சேர்ந்த பர்வாயிஜ் அகமது ஹஜாம் என்பவர் வழிகாட்டியாக இருந்து மற்ற 3 பேருக்கு உதவியுள்ளார்.

முகமது சபி ஹஜாம், ரியாஸ் அகமது பட் மற்றும் யாசிர் பட் ஆகிய 3 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், டார்ச் லைட் மற்றும் பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.