மாநில செய்திகள்

கொரோனா பரவல் தடுப்பு பணிகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை + "||" + Corona Spreading Prevention Tasks: The Chief Secretary consults with the District Collectors today

கொரோனா பரவல் தடுப்பு பணிகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை

கொரோனா பரவல் தடுப்பு பணிகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
கொரோனா பரவல் தடுப்பு பணிகள் பற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை, 

தமிழகத்தில் பரவலாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று அதிகரித்து வருகிறது. மேலும் 3-வது கொரோனா தொற்று அலை பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு பற்றியும் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் மாவட்ட அளவில் கொரோனா தொற்று பரவலின் நிலை மற்றும் சில அரசு திட்ட செயல்பாடுகள் பற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று தடுப்பில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தொற்று பரவல் அதிகரிக்கும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக வைக்கப்படுவது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் தலைமைச்செயலகத்தில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச்செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனைகளை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்குவார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு: மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே
கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.
2. கொரோனா பரவல் எதிரொலி: திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
திருப்பூர் மாவட்டத்தில் 3-வது அலை கொரோனா பரவலை தடுக்க காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவை மட்டுமே இயங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
3. கொரோனா பரவலை தடுக்க 79 சிகிச்சை மையங்கள்: சென்னை ஐகோர்ட்டில், அரசு அறிக்கை
கொரோனா பரவலை தடுக்க 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
4. கொரோனா பரவல்; பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்
கொரோனா பரவலை முன்னிட்டு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
5. கொரோனா பரவல்: கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.