தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம்: சம்பல் மாவட்டத்தில் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் பலி; 8 பேர் காயம் + "||" + UP: 7 dead, 8 injured in bus collision accident in Sambhal

உத்தரபிரதேசம்: சம்பல் மாவட்டத்தில் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் பலி; 8 பேர் காயம்

உத்தரபிரதேசம்: சம்பல் மாவட்டத்தில் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் பலி; 8 பேர் காயம்
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
சம்பல்,

உத்தரப்பிரதேசத்தின் பஹ்ஜோய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆக்ரா-சண்டவுசி நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதியதில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

லஹரவன் கிராமத்திற்கு அருகே நேற்று இரவு நடந்த திருமண விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிகொண்டிருந்த பஸ் ஒன்று சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. முன்னதாக அவர்கள் சென்ற பேருந்தின் டயர் பஞ்சர் ஆனதால் பழுதுபார்ப்பதற்காக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. சில பயணிகள் பஸ் பழுதுபார்க்கப்படுவதற்காக வெளியில் காத்திருந்தனர்.

 திடீரென, வேகமாக வந்த மற்றொரு பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் மீது மோதியதில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை பஹோஜியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை மோதிய, அந்த இரண்டாவது பேருந்து சம்பவ இடத்திற்கு அருகே கவிழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பேருந்தின் ஓட்டுநரும், கிளினரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் புதிதாக உயிரிழப்பு இல்லை
உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நேற்று தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
2. உத்தர பிரதேசத்தில் பயங்கர விபத்து: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் பலி
உத்தர பிரதேசத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த பேருந்து மீது டிரக் மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பாக சாலையில் தூங்கிக் கொண்டு இருந்த தொழிலாளர்கள் பலியாகினர்.
3. உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி, அகிலேஷ் யாதவுக்கு கடும் பின்னடைவு
உத்தர பிரதேச உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
4. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் தேர்தல்களில் தனித்து போட்டி - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு
உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
5. உத்தர பிரதேசத்தில் முகக்கவசம் அணியாத நபர் மீது துப்பாகிச்சூடு
முகக்கவசம் அணியாததால் வாடிக்கையாளரின் காலில் வங்கிக் காவலர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.