தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் பயங்கர விபத்து: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் பலி + "||" + 18 Sleeping On Road Dead As Truck Hits Bus In Uttar Pradesh's Barabanki

உத்தர பிரதேசத்தில் பயங்கர விபத்து: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் பலி

உத்தர பிரதேசத்தில் பயங்கர விபத்து: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் பலி
உத்தர பிரதேசத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த பேருந்து மீது டிரக் மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பாக சாலையில் தூங்கிக் கொண்டு இருந்த தொழிலாளர்கள் பலியாகினர்.
லக்னோ,

உத்தர பிரதேசத்தின் பரபன்கி மாவட்டத்தில் டிரக்-  பேருந்து  மோதிக்கொண்ட விபத்தில் 18-பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்து உத்தர பிரதேச போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

  உத்தர பிரதேசத்தின் லக்னோ- அயோத்யா தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரிட்டுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பஸ் ஒன்றில் வருகை தந்துள்ளனர். அவர்கள் பயணித்த  பேருந்தில்  பழுது ஏற்பட்டதால், பேருந்து  சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டது. 

நள்ளிரவு என்பதால் பேருந்தின் முன்பக்கத்தில்  அதாவது சாலையில், தொழிலாளர்கள் பலர் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலை 1.30 மணியளவில்  பேருந்தின் பின்புறம், அசூர வேகத்தில் வந்த டிரக் ஒன்று மோதியுள்ளது.  

இந்த பயங்கர விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் உறங்கி கொண்டு இருந்த தொழிலாளர்கள்18 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா- பாஜக அதிர்ச்சி
தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. உத்தர பிரதேசத்தில் பாஜக மந்திரியின் திடீர் ராஜினாமாவால் பரபரப்பு
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள சுவாமி பிரசாத் மயூரா திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
3. எகிப்தில் பேருந்துகள் மோதி விபத்து: 14 பேர் பலி, 17 பேர் கடுகாயம்
எகிப்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் பலியாகினர்.
4. ஜார்க்கண்டில் பஸ் லாரி நேருக்கு நேர் மோதல்: 16 பேர் உயிரிழப்பு...!
கோவிந்த்பூர் - சாகிப்கஞ்ச் நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
5. சண்டிகர்: டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!
சண்டிகரில் டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.