தேசிய செய்திகள்

திரிபுராவில் பா.ஜ.க-கம்யூனிஸ்டு மோதல் முற்றுகிறது அடிதடியில் 50 பேர் காயம்; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு + "||" + BJP-Communist clash ends in Tripura 50 injured in clashes; Police concentration due to tension

திரிபுராவில் பா.ஜ.க-கம்யூனிஸ்டு மோதல் முற்றுகிறது அடிதடியில் 50 பேர் காயம்; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

திரிபுராவில் பா.ஜ.க-கம்யூனிஸ்டு மோதல் முற்றுகிறது அடிதடியில் 50 பேர் காயம்; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு
திரிபுராவில் பா.ஜ.க-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே மோதல் முற்றி உள்ளது. 2 நாட்களில் அடிதடியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர். பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.
அகர்தலா,

திரிபுராவில் பா.ஜ.க. ஆளும் கட்சியாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கிறது. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான மாணிக் சர்கார், கடந்த 6-ந் தேதி தனது தன்பூர் தொகுதிக்கு செல்ல முயன்றபோது, பாஜ.க.வினர் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவானது.


பின்னர் கம்யூனிஸ்டு கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று பா.ஜ.க.வினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 30 பேர் காயம் அடைந்தனர். அடுத்த நாளில் பாஜ.க.வினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

வக்கீல் வீட்டிற்கு தீ

இந்த மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது. கோமதி, செபகிஜலா மாவட்டங்களில் 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மோதல் ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களில் இரு கட்சியினரும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

இந்த மோதலில், கம்யூனிஸ்டு ஆதரவாளரான வக்கீல் ரணதிர் தேப்நாத் வீட்டில் பா.ஜ.க.வினர் தீவைத்ததாக கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த 70 வயது மூதாட்டி தீக்காயம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தினரை தீவைத்து கொல்ல முயன்றதாக கம்யூனிஸ்டு புகார் அளித்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் 32 பேரின் வீடுகள் பா.ஜ.க.வினரால் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.

மூத்த கம்யூனிஸ்டு தலைவர் சுபாஷ் தேப்பிற்கு தலை, வயிறு, கால்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்திய மந்திரி மிரட்டல்

பா.ஜ.க.வை சேர்ந்த மந்திரி சுஷாந்தா சவுத்திரி மற்றும் மத்திய மந்திரி பிரதிமா பவுமிக் ஆகியோர் கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து பேசிய பின்பு, பா.ஜ.க. தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கம்யூனிஸ்டு புகார் தெரிவித்துள்ளது.

இதேபோல பா.ஜ.க.வை சேர்ந்த மோபஸ் மியா, கம்யூனிஸ்டு தொண்டர்களால் தாக்கப்பட்டு மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜ.க. தொண்டர்கள் கோமதி மற்றும் செபகிஜலா மாவட்டங்களின் அனைத்து எல்லையையும், உதய்பூரில் தேசிய நெடுஞ்சாலையையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து போலீஸ் குவிக்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு இடமாற்றம்

கடந்த 6-ந் தேதி போலீசார் கம்யூனிஸ்டு தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு, அவர்களது தாக்குதலை தடுக்காததுதான் பிரச்சினைக்கு காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டி உள்ளது. இதற்கிடையே பா.ஜ.க.வின் கோரிக்கையை தொடர்ந்து செபகிஜலாவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இடம் மாற்றப்பட்டு உள்ளார்.

இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரும்பாலான வழக்குகளில் போலீஸ் விசாரணை குறைபாட்டால் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்
பெரும்பாலான வழக்குகளில் போலீசார் நடத்தும் விசாரணையில் குறைபாடு அல்லது தவறு இருப்பதால் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளது.
2. குலாப் புயல்: நள்ளிரவில் கரையை கடக்கும்; ஒடிசாவில் மீட்பு குழுக்கள் குவிப்பு
ஒடிசாவில் குலாப் புயலை முன்னிட்டு பேரிடர், தீயணைப்பு துறையை சேர்ந்த மீட்பு குழுக்கள் குவிக்கப்பட்டு உள்ளன.
3. திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை
திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை 32 பெண்களை ஏமாற்றியதாக திடுக்கிடும் வாக்குமூலம்.
4. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. சைக்கிளில் நேற்று ஈரோடு வந்த ரிசர்வ் போலீஸ் படையினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
5. தமிழக போலீசாரின் கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு
தமிழக போலீசாரின் வரலாற்று பெருமை, கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.