பி.டி.எஸ். இசைக்குழு தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு - கடந்து வந்த பாதை குறித்து புத்தகம் வெளியீடு


பி.டி.எஸ். இசைக்குழு தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு - கடந்து வந்த பாதை குறித்து புத்தகம் வெளியீடு
x

பி.டி.எஸ். இசைக்குழு, தங்களது 10 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்துள்ளது குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சியோல்,

கடந்த 2010-ம் ஆண்டு தென் கொரியாவைச் சேர்ந்த 7 பாடகர்கள் இணைந்து 'பாங்க்டான் பாய்ஸ்' அல்லது 'பி.டி.எஸ்.' என்று அழைக்கப்படும் இசைக்குழுவை உருவாக்கினர். இந்த இசைக்குழு கடந்த 2013-ம் ஆண்டு 'டூ கூல்;டூ ஸ்கூல்' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டு தங்கள் இசைப்பயணத்தை தொடங்கினர்.

தொடர்ந்து ஹிப்-ஹாப் எனப்படும் இசைப்பாணியில் பல்வேறு பாடல்களை வெளியிட்டு பி.டி.எஸ். இசைக்குழு பிரபலமடைந்தது. இளம் தலைமுறையினரை கவரும் வகையில் பாடல் வரிகள், நடனம், இசைக்கோர்ப்புகள் அடங்கிய ஆல்பங்களை இவர்கள் உருவாக்கி வெளியிட்டனர்.

பி.டி.எஸ். இசைக்குழுவின் 'டார்க்&வைல்ட்', 'வேக் அப்', 'விங்ஸ்' உள்ளிட்ட ஆல்பங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 'டைனமைட்', 'பட்டர்', 'பெர்மிஷன் டு டான்ஸ்' உள்ளிட்ட தனிப்பாடல்களும் பெரும் ஹிட்டாகி உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பி.டி.எஸ். இசைக்குழுவின் பாடல்களுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது.

அமெரிக்க இசை விருதுகள், பில்போர்ட் இசை விருதுகள், கோல்டன் டிஸ்க் இசை விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இந்த இசைக்குழு பெற்றுள்ளதோடு, 5 முறை கிராமி விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தற்போது தென் கொரியாவின் நம்பர் 1 இசைக்குழுவாக விளங்கும் பி.டி.எஸ். இசைக்குழு, தங்களது 10 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்துள்ளது குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த புத்தகத்திற்கு 'பிஹைண்ட் தி ஸ்டோரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.


Next Story