15 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 10 நாட்கள் சிறை - இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு

15 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 10 நாட்கள் சிறை தண்டனை விதித்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 10 நாட்கள் சிறை - இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு
Published on

கொழும்பு,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 2 விசைப்படகு மற்றும் அதில் இருந்த 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நேற்று முன்தினம் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் நேற்று முன்தினம் கைதான 15 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 10 நாட்கள் சிறை தண்டனை விதித்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com