பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு- 100 பேர் காயம்


பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 46  ஆக உயர்வு- 100 பேர் காயம்
x
தினத்தந்தி 30 Jan 2023 3:23 PM IST (Updated: 30 Jan 2023 5:30 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 100 க்கும் மேற்பட்டேர் காயமடைந்துள்ளதாக பாக்., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 46 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதேசமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story