ஜப்பானில் பள்ளி பஸ் மீது லாரி மோதி விபத்து - 18 மாணவர்கள் படுகாயம்


ஜப்பானில் பள்ளி பஸ் மீது லாரி மோதி விபத்து - 18 மாணவர்கள் படுகாயம்
x

ஜப்பானில் பள்ளி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி குழந்தைகள் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

டோக்கியோ,

ஜப்பானின் மேற்கு மாகாணமான நராவில் 30-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது.

கசிகரா நகர் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை அந்த பஸ் திடீரென இழந்தது. இதனால் எதிரே வந்த கனரக லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

1 More update

Next Story