கணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்

பாகிஸ்தானில் புதுப்பெண் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
கணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மத்திய முசாபர்கார்ஹ் நகரில் கடந்த செப்டம்பரில் ஆசியா பீபி என்ற இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லை. அவரை கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தினை நடத்தியுள்ளனர் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் கிராம பகுதிகள் மற்றும் ஏழை குடும்பங்களில் கட்டாய திருமணம் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின் கடந்த வாரம் கணவருக்கு கொடுக்க இருந்த பாலில் ஆசியா விஷம் கலந்துள்ளார். ஆனால் அதனை கணவர் குடிக்கவில்லை.

அதன்பின்னர் அந்த பால் ஆனது லஸ்சி, மோர் என தயார் செய்யப்பட்டு கணவரின் குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் முல்டான் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆசியா மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

ஆசியாவின் காதலர் என கூறப்படும் நபர் மற்றும் அவரது அத்தை ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தீவிரவாத ஒழிப்பு சட்டத்தின்படி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com