பால் பொருட்கள் தயாரிப்புகளில் தொற்று நோய்க்கிருமிகள் 12 மில்லியன் பால் பவுடர் திரும்ப பெறப்பட்டது


பால் பொருட்கள்  தயாரிப்புகளில் தொற்று நோய்க்கிருமிகள் 12 மில்லியன் பால் பவுடர் திரும்ப பெறப்பட்டது
x
தினத்தந்தி 2 Feb 2018 5:41 PM IST (Updated: 2 Feb 2018 5:41 PM IST)
t-max-icont-min-icon

பால் பொருட்கள் தயாரிப்புகளில் தொற்று நோய்க்கிருமிகள் ஐரோப்பா கண்டம், ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் 12 மில்லியன் பால் பவுடர் திரும்ப பெறப்பட்டது.

பாரீஸ்

 பிரான்சு நாட்டு பால் பொருட்கள் உற்பத்தி செய்யும்  நிறுவனத்தின் தயாரிப்புகளில் தொற்று நோய்க்கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாகவே தனது நிறுவனத் தயாரிப்புகள் சிலவற்றில் நோய்க்கிருமிகள் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது . கடந்த வருடம் சால்மோனெல்லா (salmonella) என்ற  கிருமி நோய்த்தொற்று வெடித்துக் கிளம்பியதையடுத்து பல மில்லியன் பால் பவுடர் பெட்டிகளை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளது.

லாக்டலிஸ் நிறுவனம் சந்திக்கவுள்ள  இந்தப்பிரச்சினையால்  இந்த நிறுவனத்திற்கு பல நூறு மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட பல குழந்தைகளின் பெற்றோர்  நிறுவனத்தின்மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஐரோப்பா கண்டம், ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவற்றிலுள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்ட சுமார் 12 மில்லியன் பால் பவுடர் பெட்டிகள் திரும்பப் பெறப்படவுள்ளன.

பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாதிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தின்  ஆண்டு வருமானம் 17 பில்லியன் யூரோக்கள் ஆகும். 47 நாடுகளில் தயாரிப்பு தொழிற்சாலைகளைக் கொண்ட இந்நிறுவனத்தின் பிரான்சு கிளைகளில் மட்டும் 15,000 பேர் வேலை செய்கிறார்கள்.

நோய்க்கிருமியால் ஏற்படும் பாதிப்புகள்  இந்த சால்மோனெல்லா  கிருமியால் நோய்த்தொற்று ஏற்பட்டால்  வயிற்று போக்கு  வயிற்றுப்பிடிப்பு, வாந்தி மற்றும் பயங்கர நீரிழப்பு ஏற்படும். குழந்தைகளுக்கு உயிரிழப்பும் ஏற்படலாம். பால் தரும் விலங்குகளிடமிருந்து பரவும் இந்த நோய்க்கிருமியால் ஏற்படும் நோய் குழந்தைகளுக்கும் மிகவும் வயதான முதியவர்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது.

இதே நோய்   கருமி தான் 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்த்தொற்றிற்கும் காரணமாக இருந்தது. இப்போது பிரச்சினைக்கு காரணமாக உள்ள வட மேற்கு பிரான்சில் அமைந்துள்ள தொழிற்சாலைதான் 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்த்தொற்றிற்கும் காரணமாக இருந்தது. பாலை உலர்த்தும் அமைப்புகளிலொன்றில் ஏற்பட்ட நோய்த்தொற்றே இப் பிரச்சினைக்கு காரணமாக அமைந்ததால்,  லாக்டலிசுக்கு சொந்தமான அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. 

2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்த்தொற்றினால் 146 குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதில் குறைந்தது 38 குழந்தைகளின் பிரச்சினைக்கு Lactalis பால்தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
1 More update

Next Story