உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 4 Feb 2018 3:03 AM IST (Updated: 4 Feb 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

* அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும் வகையில் புதிய கொள்கையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இது சிறிய ரக அணுக்குண்டுகளை தயாரிக்க உதவும்.

* தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைப்பதற்கு முன்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ஜப்பானுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். இதற்காக அவர் செவ்வாய்க்கிழமை டோக்கியோ சென்று அடைகிறார்.

* பின்லாந்து அதிபர் சாலி நீனிஸ்டோ (வயது 69), ஜென்னி (40) தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. அதிபர் சாலி நீனிஸ்டோ ஒரு கார் விபத்தில் தனது முதல் மனைவியை 1995-ம் ஆண்டு பறிகொடுத்தார். அதைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு ஜென்னியை மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஐ.நா. சபை விதித்த பொருளாதார தடைகளை மீறி நிலக்கரி, இரும்பு, உருக்கு உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்து வடகொரியா 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1300 கோடி) சம்பாதித்து உள்ளது. இந்த தகவல் ஐ.நா. ஆய்வறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

* உலகிலேயே ஹாங்காங்கில்தான் அதிகபட்சமாக மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 84 ஆண்டுகளாக உள்ளது என ஐ.நா. சபையின் மனித அபிவிருத்தி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 
1 More update

Next Story