அமெரிக்காவில் சூப்பர்மார்க்கெட் நடத்தி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை


அமெரிக்காவில் சூப்பர்மார்க்கெட் நடத்தி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 9 Feb 2018 11:50 AM IST (Updated: 9 Feb 2018 11:50 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பலியானார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பர்னெட் பெர்ரி சாலையில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த பர்ம்ஜித்சிங் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல், பர்ம்ஜித்சிங் தனது வியாபார பணிகளை கவனித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர், திடீரென  பர்ம்ஜித்சிங்கை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த பர்ம்ஜித்சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த கொலையை அரங்கேற்றிவிட்டு, அடுத்த கடைக்கு சென்று அங்கிருந்த பர்தே படேல் என்பவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு கடையில் இருந்த பணம், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை அந்த நபர் திருடிசென்றுள்ளார். துப்பாக்கிகுண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்த பர்தே படேல், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அடுத்தடுத்த இரு குற்றச்சம்பவம் குறித்து விசாரணையை துவக்கிய கவுண்டி போலீசார், சிசிடிவி கேமிரா பதிவு மூலம் கொலையாளியை கைது செய்துள்ளனர். விசாரணையில்  கொலையாளி ரஷத் நிகோல்சன் (வயது 28) என்பதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொலைக்கு வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
1 More update

Next Story