உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 11 Feb 2018 3:00 AM IST (Updated: 10 Feb 2018 10:49 PM IST)
t-max-icont-min-icon

* துருக்கியில் இஸ்தான்புல் நகரில், ஐ.எஸ். அமைப்பின் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகிற 31 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

* சிரியாவில் உதவிப்பொருட்கள் போய்ச்சேரவும், காயம் அடைந்தவர்களையும் உடல் நலமற்றவர்களையும் வெளியேற்ற வசதியாகவும் 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என்பதை பரிசீலிப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்து உள்ளது.

* சீனா தனது வர்த்தக கூட்டாளிகளுக்கு வழங்குகிற வரிச்சலுகையை பாகிஸ்தானும் பெறத்தக்க விதத்தில், இரு நாடுகளும் வர்த்தக உடன்படிக்கையை மாற்றி அமைக்க சம்மதித்து உள்ளன.

* அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக ஜனநாயகக் கட்சியின் குறிப்பாணையில் தேச முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் அடங்கி இருப்பதாகக்கூறி, அதை வெளியிட முடியாதபடிக்கு அதிபர் டிரம்ப் தடை செய்து விட்டார். இதை நாடாளுமன்ற பிரதிநிதித்துவ சபை ஜனநாயகக் கட்சி தலைவர் நான்சி பெலோசி குறை கூறி உள்ளார். 
1 More update

Next Story