உலகைச் சுற்றி


உலகைச் சுற்றி
x
தினத்தந்தி 14 Feb 2018 3:00 AM IST (Updated: 14 Feb 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

* சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நிதி வழங்குவதை 2025–ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* எகிப்து நாட்டில் சினாய் தீபகற்ப பகுதியில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 400–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

* நைஜீரியாவில் 2014–ம் ஆண்டு, 200–க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்பு உடைய ஹருணா யகயா என்பவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து இந்த தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள் மத்திய கிழக்கு மற்றும் வடகொரிய விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறுகிறது. வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவதை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதினிடம் டிரம்ப் கூறியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவிக்கிறது. 

* தென்கொரியாவுக்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டியையொட்டி சென்று இருந்த வட கொரிய தூதுக்குழுவினர் நாடு திரும்பினர். தன்நாட்டினருக்கு வடகொரியா அளித்த வரவேற்புக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் திருப்தி அடைந்து உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘நல்லிணக்கத்துக்கான இதமான சூழ்நிலையையும், பேச்சுவார்த்தையையும் ஊக்குவிப்பது முக்கியம்’’ என்று தெரிவித்தார்.
1 More update

Next Story