தென்னாப்பிரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகினார் ஜேக்கப் ஜூமா


தென்னாப்பிரிக்க அதிபர்  பதவியில் இருந்து விலகினார் ஜேக்கப் ஜூமா
x
தினத்தந்தி 15 Feb 2018 9:18 AM IST (Updated: 15 Feb 2018 9:18 AM IST)
t-max-icont-min-icon

தென்னாப்பிரிக்க அதிபர் பதவியில் இருந்து சொந்த கட்சியினரின் எதிர்ப்பினால் ஜேக்கப் ஜூமா விலகினார். #Tamilnews

பிரிட்டோரியா,

தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்க நேசனல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  அக்கட்சியை சேர்ந்த ஜேக்கப் ஜூமா அதிபராக இருந்த நிலையில் இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

அதிபர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜூமா விலக வேண்டும் என அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர்.  அவர் பதவி விலகாவிட்டால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெளியேற்றப்படுவார் என கட்சி அச்சுறுத்தியது.

இந்நிலையில், 30 நிமிட தொலைக்காட்சி உரையில் ஜேக்கப் ஜூமா கூறுகையில், குடியரசின் அதிபர் பதவியில் இருந்து உடனடியாக நான் விலகுகிறேன் என கூறினார்.  மக்களுக்கு சிறப்பான சேவைகளை செய்திருக்கிறேன் என்றும் கூறினார்.

தென்னாப்பிரிக்காவின் துணை அதிபரான சிரில் ராமபூசா இன்று அல்லது நாளை புதிய அதிபராக நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story