மெக்சிகோ நாட்டில் மீண்டும் பயங்கர நில நடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின

x
தினத்தந்தி 19 Feb 2018 8:40 PM GMT (Updated: 19 Feb 2018 8:40 PM GMT)

மெக்சிகோ நாட்டின் ஒயாசகா மாகாணத்தில் உள்ள சாந்த காட்டரினா மெசோகன் நகரில் கிழக்கு பகுதியில் நேற்று அதிகாலையில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் ஒயாசகா மாகாணத்தில் உள்ள சாந்த காட்டரினா மெசோகன் நகரில் கிழக்கு பகுதியில் நேற்று அதிகாலையில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 புள்ளியாக இருந்தது.

இதனால் சில வினாடி நேரம் வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. அப்போது அபாய எச்சரிக்கை மணி தொடர்ந்து ஒலிக்கப்பட்டது. இதையடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் உயிர் பிழைக்க அலறியடித்துக் கொண்டு வெட்ட வெளிக்கு ஓடினர். எச்சரிக்கை மணி ஒலிப்பது நின்ற பிறகே மக்கள் வீடுகளுக்கு திரும்பினர். இதன் தாக்கத்தை 320 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மெக்சிகோ சிட்டி நகரிலும் உணர முடிந்தது.

இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவரவில்லை. அங்குள்ள அரசுக்கு சொந்தமான ‘பெமெக்ஸ்’ என்ற எண்ணெய் நிறுவனம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பவ இடத்துக்கு மாகாணத்தின் அவசரகால மீட்பு படையினர் விரைந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளியாக பதிவான நில நடுக்கம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்தநிலையில் இந்த நில அதிர்வு அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.

மெக்சிகோ நாட்டில் மீண்டும் பயங்கர நில நடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின

மெக்சிகோ சிட்டி, பிப்.20-

Next Story