உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 24 Feb 2018 10:00 PM GMT (Updated: 24 Feb 2018 6:04 PM GMT)

* நேபாளத்தில் புதிய அரசில் 17 அமைச்சகங்கள் மட்டும் இருக்கும் என தெரிய வந்து உள்ளது.

* சீனாவை ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் 3 நாள் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) பீஜிங்கில் தொடங்குகிறது. அடுத்த மாதம் மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய உள்ள நிலையில், அதிபர் ஜின்பிங் தலைமையில் நடக்கிற இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

* அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் தடுப்பு வேலி மீது ஒரு பெண் வேனை ஓட்டிச்சென்று மோதினார். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார். டென்னிசி மாகாணம், லா வெர்க்னி நகரை சேர்ந்த அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

* மியான்மரில் ராக்கின் மாகாணத்தின் தலைநகர் சிட்வேயில் 3 குண்டுகள் நேற்று வெடித்தன. இதில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். இந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.

* உலக நாடுகளில் துப்பாக்கிக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகளை கொண்ட நாடு ஆஸ்திரேலியா. ஆனால் அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடுகள் கொண்டு வருவது தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எந்த ஆலோசனையும் கூறுவதற்கு இல்லை என்று அந்த நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறினார்.

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையிட்டது என்ற குற்றச்சாட்டின் மீது ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்துகிறது. இதில், ஜனாதிபதி டிரம்பின் பிரசார குழுவில் இடம் பெற்று இருந்த ரிக் கேட்ஸ் என்பவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு உள்ளார்.

* சோமாலியாவில் தலைநகர் மொகாதிசுவில் நேற்று முன்தினம் நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்புகளில் 18 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 45 ஆக உயர்ந்தது. இந்த குண்டுவெடிப்புகளுக்கு அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பு உடைய ‘சபாப்’ பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். 

Next Story