இம்ரான்கான் 2–வது மனைவி, பாகிஸ்தானை விட்டு ஓட்டம்


இம்ரான்கான் 2–வது மனைவி, பாகிஸ்தானை விட்டு ஓட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2018 3:45 AM IST (Updated: 25 Feb 2018 10:47 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் (வயது 65). இவர் தற்போது அங்கு தெக்ரீக்–இ–இன்சாப் கட்சியின் தலைவராக உள்ளார்.

இஸ்லாமாபாத்,

இம்ரான்கான் முதலில் இங்கிலாந்து நாட்டின் ஜெமிமா கோல்டுஸ்மித்தை 1995–ம் ஆண்டு திருமணம் செய்தார். 2 குழந்தைகள் பிறந்த நிலையில் அவரை 2004–ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதைத்தொடர்ந்து பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ரேஹம்கானை 2015–ம் ஆண்டு இம்ரான்கான் மறுமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதே ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார்.

சமீபத்தில் தனது ஆன்மிக வழிகாட்டியான பஸ்ரா பிபி என்பவரை 3–வது திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், இம்ரான்கானின் 2–வது மனைவி ரேஹம்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரை மர்ம நபர்கள் தொலைபேசியில் அழைத்து, ‘‘இம்ரான்கானுக்கு எதிராக பேசினால் குண்டுவைத்து கொல்லப்படுவீர்கள்’’ என மிரட்டி உள்ளனர்.

இதனால் அவர் பாகிஸ்தானை விட்டு தனது உதவியாளருடன் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இம்ரான்கான் 3–வது திருமணம் செய்துகொண்டு உள்ள பஸ்ரா பிபியுடன் தனது திருமணத்தின்போதே தொடர்பில் இருந்ததாக ரேஹம்கான் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story