மோடியை மிமிக்ரி செய்து காட்டிய டிரம்ப்


மோடியை மிமிக்ரி செய்து காட்டிய டிரம்ப்
x
தினத்தந்தி 28 Feb 2018 4:30 AM IST (Updated: 28 Feb 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மோடியை போன்று மிமிக்ரி செய்தார்.

வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் மாகாண கவர்னர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஹார்லே டேவிட்சன்ஸ் மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்ச வரி விதிப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடியுடன் தான் பேசியதை நினைவு கூர்ந்தார்.

அப்போது அவர், “நான் பிரதமர் மோடியுடன் பேசியபோது நாங்கள் 50 சதவீத அளவுக்கு வரியை குறைக்கிறோம் என்றார். நானும் சரி என்றேன். ஆனால் அப்படி (வரிக்குறைப்பு) எதையும் நாம் பெறவில்லை” என கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது மோடியைப் போன்று உடல்மொழியை வெளிப்படுத்தி, போடியத்தில் (மேடையில்) ஒரு கையை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையை ஆட்டிக்கொண்டு, தீர்க்கமான குரலில், “அவர் மிகவும் அழகாக கூறினார். அவர் ஒரு அழகான மனிதர். நாங்கள் 75 சதவீத அளவுக்கு குறைத்து விட்டோம். 50 சதவீத அளவுக்கு குறைக்கிறோம் என்றார். நான் ‘ஹா’ என்றேன். வேறு என்ன சொல்ல?” என்று குறிப்பிட்டார்.

இது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. 
1 More update

Next Story