உலகைச் சுற்றி

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், 7 மாகாணங்களில் ரஷியாவின் தலையீடு இருந்ததற்கு ஆதாரம் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது.
* பாகிஸ்தான் இனிதான் பயங்கரவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளதால், தொடர்ந்து அந்த நாட்டுக்கான நிதி உதவி முடக்கப்படும் என்று அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி ஜோசப் வோட்டல் கூறி உள்ளார்.
* சவுதி அரேபியாவில் பட்ஜெட் இலக்குகளை அடைவதற்கு ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்று அதன் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறினார். இந்த ஆண்டு, அந்த நாட்டில் பட்ஜெட் பற்றாக்குறை 52 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் கோடி) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
* பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாகவும், நீர்நிலைகள் நாசமாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
* அமெரிக்காவுடனான கூட்டு போர் பயிற்சி, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெறும் என்று தென் கொரிய அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.
* சீன அதிபரின் பதவிக்காலத்தை எல்லையற்று நீட்டிக்கச்செய்யும் நடவடிக்கையை தீவிரமாய் கவனித்து வருவதாக அமெரிக்கா கூறி உள்ளது. மேலும், எல்லையில் நிலவும் பதற்றத்தை பொறுத்தமட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் அமர்ந்து பேச வேண்டும் என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story






