வன்முறையை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை : தலீபான்களுக்கு அமெரிக்கா பதில்


வன்முறையை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை : தலீபான்களுக்கு அமெரிக்கா பதில்
x
தினத்தந்தி 2 March 2018 12:29 PM IST (Updated: 2 March 2018 12:29 PM IST)
t-max-icont-min-icon

வன்முறையை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று தலீபான்களின் கோரிக்கைக்கு அமெரிக்கா பதிலளித்துள்ளது. #Taliban #Pentagon

வாஷிங்டன்,

அமெரிக்காவுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தலீபான்கள் விரும்பினால், அந்த அமைப்பு முதலில் பயங்கரவாதம் வன்முறைகளை கைவிட்டு விட்டு ஆப்கானிஸ்தானின் அரசியலமைப்புக்கு ஆதரவு அளிப்பது அவசியம் என்று பெண்டகன் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தலைமை செய்தி தொடர்பாளர் தனா செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சுமூகமான தீர்வு காண்பதற்காக அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாக தலீபான்கள் கூறியது பற்றி கேட்கப்பட்டது. 

இக்கேள்விக்கு பதிலளித்த தனா, தலீபான்கள் முதலில் வன்முறையை கைவிட வேண்டும், பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் மேலும், ஆப்கானிஸ்தான் அரசியலமைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும், இதை நிறைவேற்றிய பின்னர் தலீபான்கள் பேச்சுவார்த்தைக்கு வரட்டும்” என்றார். 
1 More update

Next Story