ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு; 56 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில தினங்களாக கடும் பனி கொட்டுகிறது. மேலும் அங்கு பனிப்புயலும் வீசி வருகிறது.
லண்டன்,

பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கிப்போய் உள்ளது.
சாலைகளில் முழங்கால் அளவுக்கு பனித்துகள்கள் கொட்டிக்கிடப்பதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ரெயில் மற்றும் விமான சேவைகளும் முடங்கி உள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.
பனிப்பொழிவு தொடர்பான சம்பவங்களில் போலந்து நாட்டில் மட்டும் 21 பேர் இறந்தனர். ஸ்லோவாகியாவில் 7 பேரும், செக் குடியரசில் 6 பேரும், ஸ்பெயினில் 3 பேரும் பலியாகினர்.
அதேபோல், லிதுவேனியாவில் 5 பேரும், பிரான்சில் 4 பேரும், செர்பியா, இத்தாலி, ஸ்லோவேனியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் தலா 2 பேரும், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் தலா ஒருவரும் பனிப்பொழிவால் உயிர் இழந்தனர்.
இப்படி ஒட்டுமொத்தமாக கடந்த சில தினங்களில் மட்டும் ஐரோப்பா முழுவதும் 56 பேர் உயிர் இழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏழைகள், வீடு இல்லாதவர்கள் மற்றும் அகதிகள் இந்த பனிப்பொழிவால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
மேலும் குழந்தைகள், முதியவர்கள், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல குறைபாடு உள்ளவர்கள் ஆகியோர் குளிர்தொடர்பான உபாதைகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story