தலீபான் தீவிரவாதிகள் தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் பலி


தலீபான் தீவிரவாதிகள் தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் பலி
x
தினத்தந்தி 9 March 2018 8:11 AM GMT (Updated: 9 March 2018 8:11 AM GMT)

ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் பலியாகினர். #TalibanAssault

காபூல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் ராணுவ புறக்காவல் நிலையம் மீது தலீபான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் பத்து உள்ளூர் போலீசார் இறந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதல் குறித்து மாகாண செய்தித்தொடர்பாளர் காலீ அசெய்ர் கூறுகையில், ”மாகாணத்திலுள்ள புறக்காவல் நிலையத்தின் மீது தலீபான் தீவிரவாதிகள் பெரும் எண்ணிக்கையில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தாக்குதலில் ஆப்கான் ராணுவத்தினருக்கு உதவியாக குவாஜா கார் மாவட்டத்தின் உள்ளூர் போலீசார் தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதலில் ஈடுபட்டனர். இருப்பினும் தீவிரவாதிகள் நடத்திய இந்த பயங்கரத் தாக்குதலில் 10 உள்ளூர் போலீசார் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலில் ராணுவத்தினர் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை” எனக் கூறினார்.

இதனிடையே தலீபான் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா முஜஹித், வடக்கு தாகர் மாகாணத்தில் நடத்தப்பட்ட  தாக்குதலுக்கும் போலீசார் படுகொலைக்கும் தலீபான் பொறுப்பேற்றுள்ளதாக கூறினார் என போலீசார் தரப்பில் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Next Story