நேபாளத்தில் 71 பேருடன் சென்ற வங்காளதேச விமானம் மோதி தீ பிடித்தது

நேபாளத்தில் தரையிறங்கிய போது வங்காளதேச விமானம் மோதி விபத்து நேரிட்டது. #PlaneCrash #KathmanduAirport
காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய வங்காளதேச விமானம் மோதி விபத்தில் சிக்கியது.
விமானத்தில் விமான பணியாளர்கள் உள்பட 71 பேர் இருந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நேரிட்டதும் மீட்பு பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டது. விமான விபத்து தொடர்பாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் பிரேந்திரா பிரசாத் பேசுகையில், “நாங்கள் விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறோம், விரைவில் விரிவான தகவல்களை தெரிவிப்போம்,” என கூறிஉள்ளார். விமானம் தரையிறங்கிய போது நிலைத்தடுமாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நேரிட்ட பகுதியில் இருந்து 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர் எனவும், அவர்கள் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானம் விபத்துக்குள் சிக்கியதை அடுத்து விமான நிலையத்தில் சேவை தடைப்பட்டு உள்ளது.
மோசமான வானிலை காரணமாகவே விமானம் விபத்துக்குள் சிக்கியது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மீட்பு பணியில் நேபாள ராணுவம் இறங்கியது. விமானத்தில் எரிந்துக்கொண்டு இருந்த தீயை ராணுவ வீரர்கள் அணைத்த காட்சிகள் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டாக்காவில் இருந்து புறப்பட்ட யுஎஸ் பெங்கலா விமானம் 2:20 மணியளவில் காத்மாண்டு சென்ற உள்ளது. விமான நிலையை ஓடுபாதையில் இருந்து விலகி சென்ற விமானம் அருகே இருந்த கால் பந்து மைதானத்திற்குள் புகுந்து தீ பிடித்து எரிந்தது என விமான நிலையம் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. விமானத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டாலும் உயிரிழப்பு இருக்கும் என அஞ்சப்படுகிறது.
விமானத்தில் இருந்து மிகவும் மோசமான நிலையில் எரிந்த உடல்களை மீட்பு குழுவினர் மீட்டதை பார்த்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவன செய்தியாளர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story






