அமெரிக்காவில் 6 மணி நேரத்தில் கட்டியது : பாலம் இடிந்து விழுந்து 6 பேர் சாவு


அமெரிக்காவில் 6 மணி நேரத்தில் கட்டியது : பாலம் இடிந்து விழுந்து 6 பேர் சாவு
x
தினத்தந்தி 16 March 2018 10:30 PM GMT (Updated: 16 March 2018 7:33 PM GMT)

அமெரிக்காவில் மியாமி சர்வதேச பல்கலைக்கழகம் அருகே 6 மணி நேரத்தில் கட்டிய பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம், மியாமி சர்வதேச பல்கலைக்கழகம் அருகில், கடந்த சனிக்கிழமை வெறும் 6 மணி நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம், 862 டன் எடையும், 174 அடி நீளமும் கொண்டது.

நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்தப் பாலம் சற்றும் எதிர் பாராதவிதமாக இடிந்து, 8 வழி சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந் தது. இதில் 8 வாகனங்கள் சிக்கி, நொறுங்கின.

இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அங்குள்ள கென்டால் பிராந்திய மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு இடிபாடுகளை அகற்றும் பணிகள் விடிய விடிய நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஜூவான் கார்லஸ் கூறும்போது, “பாலம் இடிந்து விழுந்தபோது பெரிய வெடி விபத்து நிகழ்ந்தது போல பயங்கர சத்தம் கேட்டது. சம்பவ இடம் பேரிடர் நடந்தது போல ஆயிற்று” என்று கூறினார்.

நெஞ்சை நொறுக்கும் இந்த விபத்தின் மீட்பு பணிகளை தான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்



Next Story