பெண் தலைவர் மீது முட்டை தக்காளி வீசிய இம்ரான் கான் கட்சியினர்

பெண் தலைவர் ஆயிஷா குலாய் ஒருவர் மீது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் முட்டை மற்றும் தக்காளி வீசப்பட்டு உள்ளனர். #ImranKhan
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் குஜராத் நகரில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பேரணி ஒன்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் கலந்து கொண்டார். வாகனம் ஒன்றில் இருந்தபடி கூட்டத்தினர் முன் பேசியபொழுது அவர் மீது காலணி ஒன்று வீசப்பட்டது.
ஆனால் அது அவர் மீது படாமல் மற்றொரு தலைவரான ஆலீம் கான் நெஞ்சு மீது பட்டது. கடந்த வாரத்தில் இது அவர் மீது நடத்தப்பட்ட 3 வது தாக்குதல் ஆகும்
இதே போன்று கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி குவாஜா ஆசிப்பின் முகம் மீது கருப்பு மை ஊற்றப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் ஆயிஷா குலாய் மீது முட்டை மற்றும் தக்காளி வீசப்பட்டு உள்ளது. நேற்று பஹவல்பூரில் ஒட்டலுக்கு வெளியே தாக்கபட்டு உள்ளார்.
இம்ரான் கான் மீது அவதூறுகள் மற்றும் ஊழல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் குலாய் என்பது குறிப்பிடத்தக்கது. தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு தான் குலாய் விலகி உள்ளார். தனக்கு இம்ரான்கான் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றம்சாட்டினார்.
சமீபகாலமாக பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






