ஓய்வு பெற சிறிது காலம் இருக்கும் போதே அமெரிக்க எப்.பி.ஐ துணை இயக்குநர் பதவி நீக்கம்

ஓய்வு பெற சிறிது காலம் இருக்கும் போதே அமெரிக்க எப்.பி.ஐ உளவு அமைப்பின் துணை இயக்குநர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஓய்வு பெற சிறிது காலம் இருக்கும் போதே அமெரிக்க எப்.பி.ஐ துணை இயக்குநர் பதவி நீக்கம்
Published on

வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரிகளை தொடர்ந்து பணிநீக்கம் செய்துவரும் நிலையில் தற்போது எப்.பி.ஐ உளவு அமைப்பின் துணை இயக்குநர் ஆண்ட்ரூ மெக்காப், பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஆண்ட்ரூ மெக்காப் பணிநீக்கம் செய்யப்பட்ட நாள் அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கும், ஜனநாயகத்திற்கும் முக்கியமான நாள் என்று அமெரிக்க அதிபர் தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.

தன்னை பணிநீக்கம் செய்திருப்பது எஃப்.பி.ஐக்கு எதிரான டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் "போரின் ஒரு பகுதி" என ஆண்ட்ரூ மெக்காப் கூறி உள்ளார்.

நீதித்துறைக்கு தலைமை தாங்கும் ஜெப் செசென்ஸ், நியாயமான விசாரணைக்கு பின் மெக்காப் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

தனக்கு எதிராக டிரம்ப் நிர்வாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக ஆண்ட்ரூ மெக்காப் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்கள் மற்றும் 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு பற்றிய எப்.பி.ஐ விசாரணையில் டிரம்ப் தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டிய ஆண்ட்ரூ மெக்காப், டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com