உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 21 March 2018 3:30 AM IST (Updated: 21 March 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

* சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே அல் காதம் என்ற மாவட்டத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் வசப்படுத்தி உள்ளனர்.

* பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசி. இவருக்கு, 2007–ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது பிரசாரத்துக்கு லிபியாவில் இருந்து நிதி அளித்ததாக புகார் எழுந்து உள்ளது. இது தொடர்பாக, அவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

* மாலத்தீவில் நெருக்கடி நிலை முடிவுக்கு வர உள்ள நிலையில், மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என இலங்கைக்கான அந்த நாட்டின் தூதர் முகமது உசேன் ஷெரீப் தெரிவித்து உள்ளார்.

* மெக்சிகோ சிட்டியில், ஸ்பெயின் தொழில் அதிபர் ஜோஸ் கொன்ஜாலஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். அங்கு வணிக வளாகம் ஒன்றில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பெண் ஒருவர் பலி ஆனார்.

* கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் குறைந்திருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளதாகவும், கொரிய விவகாரத்தில் சீனா தனது பங்களிப்பை செய்ய உள்ளதாகவும், அந்த நாட்டின் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்தார்.

* இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டேவிட் பிரைட்மேன் ஆவார். இவர், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார். இதற்காக அவரை ‘நாயின் மகன்’ என பாலஸ்தீன அதிபர் மக்முத் அப்பாஸ் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story