சீன விண்வெளி நிலையம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களில் மீது விழுந்து நொறுங்கும் அபாயம்


சீன விண்வெளி நிலையம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களில் மீது விழுந்து நொறுங்கும் அபாயம்
x
தினத்தந்தி 22 March 2018 11:15 AM IST (Updated: 22 March 2018 11:15 AM IST)
t-max-icont-min-icon

சீன விண்வெளி நிலையம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களில் மீது விழுந்து நொறுங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. #Tiangong1


ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011-ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை சீனா விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. சுமார் 8.5 டன் எடைகொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 2016-ஆம் ஆண்டுடன் தனது கட்டுப்பாட்டை முற்றாக இழந்துவிட்டது. இந்த நிலையில் டியாங்கோங் - 1 பூமியுடன் மோதி அழிவுக்குள்ளாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மணிக்கு சுமார் 27,000 கிலோ மீட்டர் அதிக வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் டியாங்கோங் – 1, பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது எரியத் தொடங்கிவிடும். எனினும் முற்றாக எரியாத நிலையில் பெரும்பாலான பகுதிகள் பூமியில் மோதக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது. 

சீன விண்வெளி நிலையம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களில் மீது விழுந்து நொறுங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மார்ச்  30 ந்தேதி முதல் ஏப்ரல் 6 ந்தேதிக்குள் நிகழலாம்.  கடந்த 2016-ஆம் ஆண்டு டியாங்கோங் – 1  என்ற சீன விண்வெளி நிலையம் அதன் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு சுற்றி வருகிறது.

கட்டுப்பாட்டை இழந்து நச்சு வாயுக்களுடன் சுற்றி வரும் இந்த விண்வெளி நிலையம் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் பூமியில் விழுந்து நொறுங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.இது பூமியை நெருங்கும் போது, பல பாகங்களாக எரிந்து சிதறி, நியூ யார்க், பார்சிலோனா, பீஜிங், ரோம், டோரோண்டோ உள்ளிட்ட நகரங்களில் விழக்கூடும் எனவும், நச்சு வாயுக்களுடன் விழுந்து நொறுங்கினால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

இந்த விண்வெளி நிலையத்தில் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் ‘ஹைட்ரஸைன்’ என்ற உயிர் கொல்லும் அமிலம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ராக்கெட்டுக்கு எரிபொருளாக பயன்படுத்தக்கூடிய ஹைட்ரஸைன், ஒரு நிறமற்ற, வழுவழுப்பான திராவகமாகும்.

இந்தத திராவத்தால் நேரிடையாக பாதிக்கப்படுபவர்கள் கோமா நிலைக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.
1 More update

Next Story