உலகைச் சுற்றி...

* மாலத்தீவில் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் 45 நாட்களாக அமலில் இருந்து வந்த நெருக்கடி நிலை நேற்று வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
* அமெரிக்க தொழில்களின் அறிவுசார் சொத்துக்களை திருடுவது, மாற்றுவது போன்றவற்றுக்காக சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பேச்சுவார்த்தைகள் நடத்தி பலனற்ற நிலையில், அமெரிக்கா இந்த முடிவுக்கு போய் உள்ளது.
* லிபியா அதிபராக இருந்த கடாபியிடம் இருந்து தனது தேர்தல் பிரசாரத்துக்கு நிதி பெற்றதாக எந்தவிதமான ஆதாரமும் இன்றி, குற்றம் சாட்டப்பட்டு உள்ளதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்க்கோசி கூறி உள்ளார்.
* இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் இஜென் எரிமலையில் இருந்து விஷ வாயு கசிவு ஏற்பட்டதால் பாதிப்புக்கு ஆளான 30 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
* ரப்பர் ஸ்டாம்ப் என்று வர்ணிக்கப்படுகிற வடகொரியா நாடாளுமன்றம், அடுத்த மாதம் 11–ந் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
* தென்கொரிய அதிபரின் பதவிக்காலம் 5 ஆண்டு என்பதை 4 ஆண்டாக குறைத்து, ஒருவர் இரு முறை பதவி வகிக்க வகை செய்யப்படுகிறது.

Related Tags :
Next Story