100-க்கும் மேற்பட்ட அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க சீனா முடிவு


100-க்கும் மேற்பட்ட அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க சீனா முடிவு
x
தினத்தந்தி 23 March 2018 11:11 AM IST (Updated: 23 March 2018 11:25 AM IST)
t-max-icont-min-icon

100-க்கும் மேற்பட்ட அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது. #China #Trade

பெய்ஜிங்,

சீனாவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 60-பில்லியன் டாலர்கள் வரை வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களை சீனா திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. எனவே அதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்காவில் சீனாவின் முதலீட்டுக்கு கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் உள்ளிட்ட உலோக பொருட்களுக்கு 50-பில்லியன் டாலரிலிருந்து 60 பில்லியன் டாலராக வரி உயர்த்தப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீன பொருளாதார கொள்கைகளால் ஏற்படும் நியாயமற்ற போட்டியை எதிர்கொள்ள நடவடிக்கைகள் தேவை என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, பல வருடங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையால் மாற்றத்தை கொண்டு வர இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக இறைச்சி பொருட்கள் உட்பட 100 அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை  அதிகரித்து உள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பல்வேறு பொருட்களுக்கு மூன்று பில்லியன் டாலர்கள் வரை வரி விதிக்கப் போவதாக சீன வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்தது. 

அதில் பழங்கள், ஒயின் மற்றும் ஸ்டீல் பைப்புகள் ஆகியவை அடங்கும். அமெரிக்காவுடான வணிகப்போரில் இறுதி வரை போராட தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் அறிவிப்பினால் அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.
1 More update

Next Story