தனக்கு மிரட்டல் வருவதாக டிரம்புடன் உறவு இருந்ததாக கூறிய ஆபாச நடிகை புகார்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் உறவு இருந்ததாக கூறிய ஆபாச நடிகை தனக்கு மர்ம மனிதர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக புகார் கூறி உள்ளார். #StormyDaniels
தனக்கு மிரட்டல் வருவதாக டிரம்புடன் உறவு இருந்ததாக கூறிய ஆபாச நடிகை புகார்
Published on

வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக முன்னாள் ஆபாச பட நடிகை ஒருவர் கூறியுள்ளார். ஸ்டார்மி டேனியல்ஸ் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு 60 நிமிட நேர்காணல் ஒன்றில் பேசும்போது, கடந்த 2006ம் ஆண்டு டிரம்ப்புடன் உடல் ரீதியான உறவு இருந்ததாக கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் காதலில் இருந்ததாகவும் இருவரும் பலமுறை உறவு வைத்துள்ளதாகவும் பிரபல ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறியிருந்தார்.

ஜனாதிபதி மீதான இந்த குற்றச்சாட்டிற்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தாலும், இது குறித்து பேசுவதை ஸ்டார்மி நிறுத்தவில்லை.

இந்த நிலையில் டிரம்புடன் உள்ள உறவு குறித்து வெளியில் ஏதும் கூறக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என ஒரு மனிதன் லாஸ் வேகாசில் வைத்து தன்னை மிரட்டியதாக டேனியல் கூறி உள்ளார். அவள் தன் இளம் மகளோடு இருந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

இது குறித்து டேனியல் கூறியதாவது:-

"நான் உண்மையை சொல்கிறேன் என அவர் அறிந்திருக்கிறார்," அவரது சட்டபூர்வ பெயர் ஸ்டீபனி கிளிஃபோர்ட் ஆகும். இது நானும் கூட(Me too) என அர்த்தம் அல்ல நான் பாதிக்கபட்டவர் அல்ல.

டிரம்ப்பைத் தொடர்புபடுத்தியதாக கூறப்படும் 2006 விவகாரத்தில் நடிகை மேலும் புதிய சான்றுகளை வழங்கினார், ஆனால் 2011 ல் இருந்து தான் அமைதியாக இருக்க அவர் அச்சுறுத்தல் தந்திரங்களை எதிர்கொண்டார்.

டிரம்ப் என்னிடம் கூறும் போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் நீ என் மகளை நினைவூட்டுகிறாய். உனக்கு தெரியும் நீ புத்திசாலி அழகாக இருக்கிறாய்., நான் உன்னை விரும்புகிறேன்."

டிரம்ப்பை தனியாக விட்டுவிடு. அந்த கதையை மறந்து விடு என அந்த மர்ம மனிதன் கூறினார். எனது மகளை பார்த்து அழகான சிறிய பெண் அவள் அம்மாவுக்கு ஏதாவது நடந்தால் அவளுக்கு அது அவமானமாக இருக்கும் என அந்த மர்ம மனிதன் மிரட்டினான். என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com