மொபைல் இணைய வேகத்தில் உலகில் இந்தியா 109 வது இடத்தில் உள்ளது


மொபைல் இணைய வேகத்தில் உலகில் இந்தியா  109 வது இடத்தில் உள்ளது
x
தினத்தந்தி 26 March 2018 4:35 PM IST (Updated: 26 March 2018 4:35 PM IST)
t-max-icont-min-icon

அதிக மொபைல் தரவு நுகர்வோரை கொண்ட இந்தியா இணைய வேகத்தில் உலகில் 109-வது இடத்தில் உள்ளது.

உலகில்  மிக அதிக மொபைல் தரவு நுகர்வோரை கொண்டது இந்தியா ஆனால் டவுன்லோடு   மொபைல் இணைய வேகத்தில் உலகில் இந்தியா  109 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 8.80 மெகாபிக்சல்கள் என்ற அளவில் இருந்து, பிப்ரவரி மாதம் 9.01 மெகா பைட்டாக மாற்றப்பட்டது. இருந்தும் உலகின் தரவரிசையில் இந்தியா  109 வது இடத்தில் தொடர்கிறது. இந்த தகவலை ஓக்லாவின் ஸ்பாட்டெஸ்ட் இன்டெக்ஸ் கூறுகிறது. உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் நிலையான வலைப்பின்னல் பதிவிறக்க வேகங்களில் கடந்த ஆண்டு இந்தியா அதிகரித்துள்ளது என்று அது தெரிவித்துள்ளது.

இதில் நார்வே நாடு முதல் இடத்தில் உள்ளது அங்கு இணைய வேகம் 62.07 மெகா பைட்டாக உள்ளது.

நாட்டில் 10 கோடிக்கும்  அதிகமான மொபைல் போன் வாடிக்கையாளர்கள் தரவு இணைப்புகளில் பெரிய அதிகரித்து வருவதால், இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டும் என உந்துதல் இருந்து வருகிறது.

நிகி ஆயோக் தலைமை நிர்வாகி அமிதாப் கந்த் டிசம்பர் மாதம் என்று கூறும் போது   உலகில் 150 கோடி ஜிகாபைட்ஸில்  மிக உயர்ந்த தரவு நுகர்வோர் நாடு இந்தியா. சீனா அமெரிக்காவை விட இது அதிகம். 
1 More update

Next Story