உலகைச்சுற்றி...

*நைஜீரியாவில் லாசா என்ற பெயரில் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சல் சுமார் 400 பேரை தாக்கி உள்ளதாகவும், 100 பேரை பலி கொண்டு உள்ளதாகவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
* இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்டு உள்ள ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் மே மாதம் திறக்கப்படுகிறது. இதையொட்டி கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதியை இஸ்ரேல் அரசு துரிதப்படுத்தி உள்ளது என அந்த நாட்டின் நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
* இங்கிலாந்து வாழ் ரஷிய உளவாளி மீதான நச்சுப்பொருள் தாக்குதல் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. இதில், அமெரிக்காவில் உள்ள ரஷிய அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது குறித்து நாங்கள் அறிந்து உள்ளோம் என ஐ.நா. சபையின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறி உள்ளார். இதே விவகாரத்தில் ஆஸ்திரேலியாவும், 2 ரஷிய அதிகாரிகளை வெளியேற்றுவதாக கூறி உள்ளது
* நைஜீரியாவில் லாசா என்ற பெயரில் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சல் சுமார் 400 பேரை தாக்கி உள்ளதாகவும், 100 பேரை பலி கொண்டு உள்ளதாகவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இன்னும் இந்தக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.
* தகவல் திருட்டு விவகாரத்தில் பேஸ் புக், டுவிட்டர், கூகுள் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரிகளான ஜூக்கர்பெர்க், ஜேக் டோர்சி, சுந்தர்பிச்சை ஆகியோரை அடுத்த மாதம் விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு அமெரிக்க நாடாளுமன்ற குழு அழைத்து உள்ளது.
Related Tags :
Next Story






