ராணுவத்திற்காக 2017-ல் அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியல் இந்தியாவுக்கு 5-வது இடம்

ராணுவத்திற்காக 2017-ல் அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம் கிடைத்து உள்ளது.
கடந்த ஆண்டில் தான் உலக நாடுகளின் ராணுவ செலவினம் அதிகரித்துள்ளதாக ஸ்வீடனின் அமைதி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
அது வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவினம் 2017 ஆம் ஆண்டு 1.73 ட்ரில்லியன் டாலர். இது கடந்த 2016 ஆம் ஆண்டை விடவும் 1.1 விழுக்காடு அதிகம் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த பட்டியலில் 610 பில்லியன் டாலருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உள்ளன.
மிகப்பெரும் ராணுவ வலிமை கொண்டுள்ள அமெரிக்காவின் ராணுவ செலவு நிலையாக உள்ளது. அந்நாட்டிற்கு அடுத்த ஏழு இடங்களில் உள்ள நாடுகளின் ராணுவ செலவின் கூட்டுத் தொகைக்கு அமெரிக்காவின் செலவு த்தொகை சமமாக உள்ளது. 2-ஆம் இடத்தில் இருக்கும் சீனா 228 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சீனா ராணுவத்திற்காக செலவிடும் தொகையானது 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 69.4 பில்லியன் டாலர் தொகை செலவிட்டு சவுதி அரேபியா 3-ஆம் இடத்தில் எட்டியுள்ளது.
மேலும், 2017-ம் ஆண்டு ரஷ்யா 66 பில்லியன் டாலர்கள் செலவு செய்ததாக குறித்த பட்டியலில் தெரிய வந்துள்ளது. இது கடந்த 1998 ஆம் ஆண்டில் இருந்து முதன் முறையாக 20 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ரஷ்யாவை அடுத்து 5-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி,தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.
ராணுவத்திற்காக 2017-ல் அதிகம் செலவிட்ட நாடுகள்:
அமெரிக்கா - $610bn
சீனா - $228bn
சவுதி அரேபியா - $69.4bn
ரஷ்யா - $66.3bn
இந்தியா - $64bn இது கடந்த ஆண்டைவிட 5.5 சதவீதம் அதிகமாகும்
பிரான்ஸ் - $57.8bn
இங்கிலாந்து - $47.2bn
ஜப்பான் - $45.4bn
ஜெர்மனி - $44.3bn
தென் கொரியா - $39.2bn
Related Tags :
Next Story






