உலகைச்சுற்றி...

* கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை கைவிடுவது என்ற முடிவில் மாற்றம் இல்லை, அது உறுதியானது, நிர்ணயிக்கப்பட்டது என்று வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறி உள்ளார்.
* அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, நியூயார்க்கில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ஜனாதிபதி டிரம்ப், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்புக்கான ஏற்பாடுகள் சரியான திசையில் சென்று கொண்டு இருக்கின்றன என்று கூறினார்.
* பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரியும், நவாஸ் ஷெரீப் கட்சியின் மூத்த தலைவருமான கவாஜா ஆசிப், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தடை விதித்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த அப்பீல் வழக்கை விசாரித்த அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு, அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது.
* அமெரிக்காவில் தேர்தல் பிரசார விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி பழமைவாத விமர்சகர் தினேஷ் டி சூசாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஜனாதிபதி டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கினார். இதற்காக டிரம்புக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

Related Tags :
Next Story