உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 6 Jun 2018 5:30 AM IST (Updated: 6 Jun 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

* பிளாஸ்டிக் மாசுவை ஒழித்துக்கட்டுவதற்கு உலகம் ஒன்றுபட வேண்டும் என்று ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்து உள்ளார்

* சிங்கப்பூரில் வரும் 12-ந் தேதி உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நல்ல முறையில் நடந்து வருவதாக வெள்ளை மாளிகை மேலும் கூறியது. அதே நேரத்தில் அணு ஆயுதங்களை அந்த நாடு முழுமையாக கைவிடாத வரையில், பொருளாதார தடை விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என தெரியவந்து உள்ளது.

* மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சார், கோலாலம்பூரில் உள்ள ஊழல் தடுப்பு முகமை தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜர் ஆனார். அவரிடம் அதிகாரிகள் நீண்டதொரு விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்தனர். இதற்கு இடையே நஜிப் ரசாக்கின் வக்கீல்கள், அவர் தொடர்பான ஊழல் வழக்கில் இருந்து விலகிக்கொண்டு விட்டனர்.

* பிளாஸ்டிக் மாசுவை ஒழித்துக்கட்டுவதற்கு உலகம் ஒன்றுபட வேண்டும் என்று ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்து உள்ளார்.

* அமெரிக்காவில் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில், பணியின்போது மரணம் அடைந்த இந்திய பத்திரிகையாளர்கள் கவுரி லங்கேஷ், சுதீப் தத்தா பாமிக் உள்ளிட்ட 18 பத்திரிகையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நியூசியம் என்று அழைக்கப்படுகிற சுதந்திர ஊடகத்தை வலியுறுத்துகிற மியூசியம் செய்து இருந்தது.

* நைஜீரியாவில் உள்ள மின்னா சிறையில் இருந்து 180 கைதிகள் தப்பி விட்டனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கு நடத்திய தாக்குதலை பயன்படுத்தி கைதிகள் தப்பியதாக தகவல்கள் கூறுகின்றன.

* அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிட்டதாக எழுந்து உள்ள புகார் பற்றி, விசாரணை நடத்தி வருகிற முல்லர், ஜனாதிபதி டிரம்பின் முன்னாள் பிரசார குழு தலைவர் பால் மனபோர்ட் மீது குற்றம் சாட்டி உள்ளார். இப்போது மனபோர்ட் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக புதிய குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
1 More update

Next Story