சவூதி அரேபியாவின் பேஷன் ஷோவில் "பேய்" போல் பறந்து செல்லும் உடை மாடல்


சவூதி அரேபியாவின் பேஷன் ஷோவில்  பேய்  போல் பறந்து செல்லும் உடை மாடல்
x
தினத்தந்தி 8 Jun 2018 6:34 AM GMT (Updated: 8 Jun 2018 6:34 AM GMT)

ரமலானை முன்னிட்டு சவூதி அரேபியாவின் பேஷன் ஷோவில் "பேய்" போல் பறந்து செல்லும் உடை மாதிரிகள் வீடியோக்கள் வைரலாகி உள்ளது.

பேஷன் ஷோவில்  ஜிஜி ஹடிட், கெண்டல் ஜென்னர், பெல்லா ஹேடிட் அல்லது மிரண்டா கெர் போன்ற ஆடை நிபுணர்கள் பல்வேறு சர்வதேச பிராண்டுகளை பிரதிநிதித்துவம் செய்யும் பெபெஷன் ஷோக்களை  நடத்துவதை  நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் சவூதி அரேபியாவில் ஒரு பேஷன் ஷோவில்  டோலஸ் & கபெனாவில் உள்ளிட்ட பல்வேறு பிராண்ட்களின் மாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு மாடல் அழகிகளுக்கு பதில் ஆடைகள் மட்டும் அந்தரத்தி பேய் போல் பறந்து வரும் ஆடை அணிவகுப்பு காட்சி நடைபெற்றது. ( டிரோன் மூலம் )ஆளில்லா விமானம்  மூலம் ஆடைகள் அணிவகுத்து கொண்டு வரப்பட்டன. இந்த பேஷன் ஷோவில் பெண்கள் மட்டுமே பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த  வீடியோக்கள் ஆன்லைன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. டிரோன்-மாடலேஷன் பேஷன் ஷோ ஆன்லைனில்  நிறைய எதிர்வினைகளை கொடுத்தது. சிலர் அதை பேய் மாடல் ஷோ என்று  விழா ஏற்பாட்டாளர்களின் கற்பனையையும் புகழ்ந்து உள்ளனர்.





Next Story